
கடந்த சில ஆண்டுகளில், துருஃபானின் சுற்றுலாத் துறை விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் 2 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 15 லட்சம் பயணிகள் இங்கு வருகை தந்தனர். சுற்றுலா வருமானம் 38 கோடி யுவானை எட்டியுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் அது 5 விழுக்காடு வகிக்கிறது. தற்போது, பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார் அவர். தவிர, 2010ஆம் ஆண்டுக்குள், துருஃபானின் சுற்றுலா உற்பத்தி மதிப்பு, உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு வகிக்கக் கூடும். செழிப்பான சுற்றுலா மூலவளம் செவ்வனே பயன்படுத்தப்பட்டால், துருஃபான் பிரதேசத்தின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை. 1 2 3 4 5
|