• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-09 16:36:32    
துருஃபானின் பொருளாதார வளர்ச்சி

cri

விவசாயிக்குடும்பத்தில் தங்கி மகிழ்வது என்ற நடவடிக்கை பயணிகளுக்கு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. பயணிகளின் வருகையால் இமாக்குலியின் குடும்பம், ஓர் ஆண்டில், 30, 40 ஆயிரம் யுவான் வருமானத்தைப் பெற முடிகிறதாம். ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் முதலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் துருஃபானுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். துருஃபான் பிரதேசத்தில், சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்து, பொருளாதார வருமானம் உயர்வதற்கு, குடும்பத்தினருடன் தங்கி மகிழ்வது என்ற நடவடிக்கையானது, சிறந்த வழிமுறையாகும். இயற்கை மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா மூலவளங்களைப் பயன்படுத்துவதில், துருஃபான் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. இயற்கை காட்சிகள் மிகுந்து காணப்படும் பிரதேசம் அது. கடல்மட்டத்திற்குக் கீழே 154 மீட்டர் ஆழமான ஐதிங் ஏரி உள்ளது. Dead seaஐ அடுத்து, உலகின் 2வது ஆழமான பகுதியாகும். கோடைகாலத்தில், அதன் வெப்ப நிலை 47 சதம பாகையை எட்டக் கூடும். பழங்காலத்தில், புகழ்பெற்ற பட்டுப்பாதை துருஃபான் வழியாகச் சென்றது.

1  2  3  4  5