
மனித சமுதாயத்தின் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளில் பல, நீண்ட காலமாக இங்கு அமைந்துள்ளன. துருஃபான் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையின் பொறுப்பாளர் வைலிநியாச்சு கூறுகிறார்—துருஃபானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பழமையான ஜியவ்ஹோ நகரை பரிந்துரைக்கிறோம். 2000 ஆண்டு வரலாறுடைய இந்நகர், உலகில் பேணிக்காக்கப்படும் மிக முழுமையான பண்படாத நகராகும். இந்நகரை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக அறிவிக்குமாறு விண்ணப்பித்துள்ளோம். அண்மையில், யுனெஸ்கோ இங்கு வந்து, சோதனை மேற்கொண்டது. துருஃபான் பிரதேசத்தின் பண்பாட்டுக் காட்சிகளில், இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட சூகுங் மசூதி, புகழ்பெற்ற காவ்சாங் நகரின் இடிபாடு, ஆயிரம் புத்தர் கற்குகை ஆகியவை இடம்பெறுகின்றன. வண்ணமயமான தேசிய இனப் பழக்கவழக்கங்களும் காணப்படுகின்றன. சுற்றுலாத் துறையை வளர்ச்சியுறச் செய்வதற்கான கொள்கையை 1989ஆம் ஆண்டில் துருஃபான் பிரதேசம் நடைமுறைப்படுத்தியது. இதனால், 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை அது முன்னேற்றுவித்துள்ளது என்றார் வைலிநியாச்சு.
1 2 3 4 5
|