• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-09 17:17:32    
பீகிங் இசை நாடக கலைஞர் ஹு ச்சுஃபன்

cri

பீகிங் இசை நாடக கலைஞரான ஹு ச்சுஃபன் அம்மையார், தொடர்ந்து 4வது முறையாக, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினராகியிருக்கிறார். சீன இசை நாடகத்தை மேலும் கூடுதலான மக்கள் புரிந்து கொள்ளத் துணை புரியும் வகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று, பீகிங் இசை நாடகத்தை அவர் நடத்தியுள்ளார். உள் நாட்டு வெளி நாட்டு மாணவர்கள் பலருக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். சீன இசை நாடக வட்டாரத்தில் அவர் ஒரு திறைமைசாலியாவார். துவக்கப்பள்ளியில் படித்த போதே, பீகிங் இசை நாடகத்தின் பாடல், வசனம், நடிப்பு, சண்டை ஆகியவற்றில் பெரும் ஆர்வம் காட்டினார். அவருக்கு பாடம் கற்றுத்தருமாறு, சுமார் 10 பீகிங் மற்றும் குயன் இசை நாடக ஆசிரியர்களை அவரது தந்தை ஏற்பாடு செய்தார். 1956ல் அவர் உயர் கல்வியில் தேறினார்.

1  2  3  4  5