• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-09 17:17:32    
பீகிங் இசை நாடக கலைஞர் ஹு ச்சுஃபன்

cri

குறிப்பாக, அவருடைய கலைப் படைப்பு எழுச்சி, ஹு ச்சுஃபனிடம் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. பிற்காலத்தில் அவர் படைத்த லீ ஹுய்நியான் கதைமாந்தர் என்ற கலை வடிவத்துக்கு மதிப்பிடற்கரிய பங்கு ஆற்றியுள்ளார். ஒரு கலைஞர் தம் வாழ்நாள் முழுவதையும் தமது கலைத் திறனை உயர்த்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் உணர்ந்து கொண்டார். 1960ல் இலையுதிர்காலத்தில் அவர் சூச்தோ நகர் பீகிங் இசை நாடக குழுவில் சேர்ந்தார். இக்குழுவில் 25 ஆண்டு பணிபுரிந்தார். பின், அதன் தலைவராகவும் பணியாற்றினார். தென் சீனாவில் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பு உண்டு. அப்போது அவரது குழுவினர் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட மேடையிலோ படகுகளிலோ இசை நாடகத்தை அடிக்கடி நடத்துவதுண்டு. அப்போது, விட்டில் பூச்சிகள் மேடையில் பறந்தன. பாடும் போது, பூச்சிகள் வாய்க்குள் நுழைந்தன. வேறுவழியின்றி அவற்றை விழுங்கினார். 1962ல், சாங்காயில் கலைஞர் லீ யூ ரு அரங்கேற்றிய ஹொன்மெய்கெ எனும் பீகிங் இசை நாடகத்தை ஹு ச்சுஃபன் கண்டு களித்தார். அதில் நடித்த லீ ஹுய் நியாங் என்பாரை அவர் மிகவும் விரும்பினார். சூச்சோ திரும்பியவுடனே அவர் அதை மாற்றி எழுதி பாலே கலைவடிவத்தை அதிகரித்தார். நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால், பண்பாட்டுப்புரட்சி காரணமாக, அது நிறைவேறவில்லை.

1  2  3  4  5