சிங்குவா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஏற்கனவே 30, 40 பீகிங் இசை நாடகங்களை அவர் கற்றுத்தேர்ந்திருந்தார். எனவே, விருப்பத்துக்கு மாறாக, அவர் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அதே வேளையில், தமது பீகிங் இசை நாடக ஆர்வத்தையும் கைவிட்டுவிடவில்லை. சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் இசை நாடக குழுவில் அவர் சேர்ந்தார். நாள்தோறும் விளையாட்டு அரங்கில் இசை நாடகப் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் நடித்த மொக்கெச்சாய், பிரியாவிடை ஆகிய பீகிங் இசை நாடகங்கள் மாணவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டன. பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுப் படிப்பை முடித்துக் கொண்ட பிறகு, குவாங் சோ பீகிங் இசை நாடகக் குழுவில் ஓர் ஆண்டு பயின்றார். 1959ல் பல்கலைக்கழகப் படிப்பைத் துறந்து, பீகிங் இசை நாடகத்தை முறைப்படி அவர் கற்றார். பின், பீகிங் இசை நாடக நாயகரான மெய் லான்பாங்கிடம் கற்கலானார். மெய் லான்பாங்கின் கடைசி மாணவியாக அவர் விளங்கினார். மெய் லான்பாங் அவருக்குப் பலவற்றைக் கற்றுத்தந்தார்.
1 2 3 4 5
|