1979ல் மீண்டும் அது அரங்கேற்றப்பட்டது. உள் நாட்டில் பெரும் வெற்றி பெற்ற பின், சீனப் பண்பாட்டு அமைச்சின் தலைமையில் ஹாங்காங்கிலும் அது அரங்கேற்றப்பட்டது. பின், இத்தாலி சென்று, லீ ஹுய் நியான் உள்ளிட்ட பல பீகிங் இசை நாடகங்களை அவர் அரங்கேற்றினார். வெனிஸ், ரோம் உள்ளிட்ட 4 நகரங்களில் 20 முறை அரங்கேற்றினார். சீனா இசை நாடகத்தை, எழில் மிக்க கலை எனவும், ஹு ச்சுஃபனை இத்தாலி மற்றும் ஐரோப்பாவை அதிர வைக்கும் நட்சத்திரம் எனவும் உள்ளூர் செய்தித்தாள்கள் பாராட்டின. 1987இல், சீனக் கலை ஆய்வுக்கழகத்தின் இசை நாடகத் தத்துவத் துறையில் அவர் சேர்ந்து பயின்றார். பின், ஆசிரியராகப் பணியாற்றினார். சீன இசை நாடகம் பற்றி, நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அவர் கற்பித்தார். அன்றி டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்திலும் ஆர்ஹுஸ் பல்கலைக்கழகத்திலும் சீன இசை நாடகம் பற்றி விரிவுரையாற்றினார்.
1 2 3 4 5
|