
தாங் ஆன் ஒரு வறிய பிரதேசமாகும். சொந்த இனத்தின் பண்பாட்டைப் பேணிக்காக்குமாறு உள்ளூர் மக்களைத் தட்டியெழுப்பி, கூடிய விரைவில் இவ்விடத்தை வறுமையிலிருந்து விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை வளர்ச்சியுறச்செய்வதன் மூலம், மக்களின் வருமானத்தை அதிகரிப்பதென, உள்ளூர் அரசு முடிவு மேற்கொண்டுள்ளது.
உயிரின வாழ்க்கைச் சுற்றுலாவானது, மனித சமுதாயத்தின் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகள் பற்றிய சுற்றுலாவாகும். இயற்கை காட்சி மட்டுமல்ல, ஒரு தேசிய இனம், ஒரு வகைப் பண்பாட்டின் தோற்ற மூலம், வளர்ச்சி நிகழ்வு நிலை ஆகியவற்றை மக்கள் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு சுற்றுலாத் துறை கூட்டு நிறுவனத்தின் மேலாளரான சென்பின் கூறினார். 1 2 3 4 5 6 7
|