
இக்குடும்பத்தில், வேளாண் துறையில் ஈடுபட்ட விவசாயிகளிலிருந்து வணிகத் துறையில் ஈடுப்ட்ட வணிகராகவும், வணிகரிலிருந்து அதிகாரியாகவும் மாறும் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில், லின்ஷ மாவட்டத்தில் புகழ்பெற்ற 4 குடும்பங்களில் ஒன்றாக வாங் குடும்பம் மாறியது. அதன் செழுமையான காலம், 450 ஆண்டுகளுக்கு அதிகமாகும். இக்குடும்பத்தின் 8 தலைமுறையினர், மிக வளமாக வாழ்ந்தனர். வாங் குடும்பத்தின் மிகச் செழுமையான 200 ஆண்டுகளில், இத்தகைய 6 கோட்டை வீடு மாதிரி கட்டடங்களும் 5 சின்னஞ்சிறு வீதிகளும் ஒரு வீதியும் கட்டியமைக்கப்பட்டன. அதன் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். தற்போது பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்ட பரப்பளவு, 45 ஆயிரம் சதர மீட்டர் மட்டுமே.
1 2 3 4 5
|