
சிங் வமிசக்காலத்தில் மன்னர் சியாசிங் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டியமைக்கப்பட்ட மண் சுவருடன் கூடிய கௌசியாயெபௌ என்னும் கட்டடம் இதுவரை சுமார் 200 ஆண்டு வரலாறுடையது. அது, இக்குடும்பத்தின் 17வது தலைமுறையின் சகோதரர் இருவரால் கட்டியமைக்கப்பட்டது. அதன் பரப்பளவு 19 ஆயிரத்து 572 சதுர மீட்டராகும் என்று வழிகாட்டி கூறினார். 1796ஆம் ஆண்டு முதல் 1811 ஆம் ஆண்டு வரை கட்டியமைக்கப்பட்ட இக்கட்டடத்தில் 35 முற்றங்கள் உள்ளன. சமயல் அறை, நூல் அறை உள்ளிட்ட 342 அறைகள் உள்ளன. 1 2 3 4 5
|