
ஆழமான Han Jiang ஆறு
சீனாவில் மிக நீளமான ஆறான யாங் சி ஆறு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பது உறுதி. யாங் சி ஆற்றின் மிகப் பெரிய கிளையான Han Jiang ஆறு பற்றி நீங்கள் கேட்டதுண்டா? இன்றைய நிகழ்ச்சியில், Han Jiang ஆற்றின் கரையோரத்தில் வாழும் மூதாட்டியர் இருவர் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். Han Jiang ஆற்றை பாதுகாக்கும் பொருட்டு, நீர் வளத்தைப் பாதுகாக்கும் கருத்தை மக்களுக்கு அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் யோசனையின் படி, "Han Jiang ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நடக்கும் முறையில் பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையினால், உள்ளூர் பிரதேசத்தின் சில தொழில் நிறுவனங்கள் மாசு வெளியேற்றுவது பயன்தரும் முறையில் தடுக்கப்பட்டுள்ளது. அவர்களால் நிறுவப்பட்ட ஹூ பெய் மாநிலத்தின் முதலாவது அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம், மென்மேலும் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 2 3 4 5
|