
தொண்டர்கள்
தற்போது, மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்தை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று Yun Jian Li கருதுகின்றார். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சார முயற்சி, சங்கத்தின் முதன்மைப்பணியாக அவர்கள் எப்போதும் வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, Han Jiang ஆற்றின் கரையோரத்தில் 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் அவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வியை, குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்பது, அவர்களின் இன்னொரு கருத்து. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும், அவர்கள் முதலில் பள்ளிகளுக்குச் சென்று, பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் முறையே 300 இடைநிலை பள்ளிகள், துவக்கப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில் பிரச்சாரம் செய்தனர். இது, நல்ல பயன் தந்துள்ளது. உள்ளூர் பிரதேசத்தின் ஒரு துவக்கப் பள்ளியின் மாணவி Zhai Ting Ting கூறியதாவது
"மூதாட்டி Yun பிரச்சாரம் செய்த பின், நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கினோம். மற்றவர்கள் பொருட்களை வீசியெறிவதைக் கண்டால், அவர் மீது குற்றஞ்சாட்டினோம். குப்பைத் தொட்டியில் வீசியெறியுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். சுத்தமான காற்றை நாங்கள் சுவாசிக்கும் பொருட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்கின்றோம். " என்றார் அவர்.
1 2 3 4 5
|