
Han Jiang ஆற்றின் தொற்றுவாய்
2002ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், Ye Fu Yi உள்ளிட்டோருடன் இணைந்து, "பசுமையான Han Jiang" என்னும் சங்கத்தை Yun Jian Li நிறுவினார். ஹூ பெய் மாநிலத்தின் முதலாவது அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் இதுவாகும்.
அப்போது முதல், Ye Fu Yi, Yun Jian Liயின் நல்ல உதவியாளராக மாறினார். நாள்தோறும் இச்சங்கத்துக்கு அதிக மக்கள் வருகின்றனர். செய்தியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிப் பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அவர்களில் இருக்கின்றனர். Han Jiang ஆற்றைப் பாதுகாக்க, எவ்வாறு பாடுபடுவது என்பது பற்றி அனைவரும் விவாதிக்கின்றனர் என்று Ye Fu Yi கூறினார். அவர் கூறியதாவது
"நாங்கள் இன்னலுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்த போதிலும், மகிழ்ச்சியடைகின்றோம். என்னுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் நண்பர்களில் சிலர் எங்கள் செயல்களை புரிந்து கொள்ளவில்லை. ஆடலினால், நமது உடல் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடுவது, மற்றவர்களுக்கு நன்மை தந்துள்ளது. அருமையான சுற்றுச்சூழலை அனைவரும் அனுபவிக்கலாம் என்று சொல்கின்றேன்" என்றார் அவர்.
மூதாட்டியர்களின் முயற்சிகளுடனும், நகரில் தொடர்புடைய வாரியங்களின் ஆதரவுடனும், சங்கம் வெகுவாக வளர்ந்துள்ளது. 100க்கும் அதிகமான உறுப்பினர்களும், 45 நிறுவனங்களும் சங்கத்தில் உள்ளனர்.
1 2 3 4 5
|