• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-07 10:25:10    
Han Jiang ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் மூதாட்டியர்

cri

மூதாட்டியர் ஓருவர் Ye Fu Yi

மூதாட்டியர் இருவரில், ஒருவரின் பெயர் Yun Jian Li. மற்றவரின் பெயர் Ye Fu Yi. அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களாவர். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள Xiang Fan நகரில் வாழ்கின்றனர். யாங் சி ஆற்றின் மிகப் பெரிய கிளை ஆறான ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீளமுடைய Han Jiang, இந்நகரத்தின் வழியாகப் பாய்ந்து ஓடுகின்றது.
Han Jiang ஆறு, பண்டைக்காலம் தொட்டு, பசுமையான, பளிங்கு போன்ற, தரமிக்க நீரினால், புகழ் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியினால், சில தொழில் நிறுவனங்களிலிருந்து வெளிவரும் கழிவு நீரும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கையினால் ஏற்படும் கழிவு நீரும், பளிங்கு போன்ற Han Jiang ஆற்றில் வெளியேற்றப்பட்டன. 2000ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் முதல், Han Jiang ஆற்றின் பள்ளத்தாக்கில் Xiang Fan பகுதியில் உள்ள 5 கிளைகளின் நீர் தூய்மைக்கேடு பற்றி Yun Jian Li சோதனை செய்து, சில கிளைகளின் தூய்மைக்கேட்டு நிலைமை மிகவும் கடுமையானது என்று கண்டுபிடித்தார். இதனால், மாசு ஊற்றுமூலத்தை வெகுவிரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் அரசுக்கு அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். 2002ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சுற்றுச்சூழல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அரசை மட்டும் சார்ந்திருக்க முடியாது. பொது மக்களும் வழிமுறையை நாட வேண்டும் என்று அவர் கருதினார்.

1 2 3 4 5