
மாசுப்பட்ட நீர்
Han Jiang ஆற்றைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை மேலும் தெளிவாக பிரச்சாரம் செய்யும் பொருட்டு, 2003ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களிலும், 2004ஆம் ஆண்டின் மே திங்களிலும், Han Jiang ஆற்றின் கரையோரத்திலும், Han Jiang ஆற்றின் கிளையான Tang Bai ஆற்றின் கரையோரத்திலும் நடைபயணத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சார நடவடிக்கைகளை Yun Jian Li மற்றும் Ye Fu Yi துவக்கினர். இந்த இரண்டு நடைபயண நடவடிக்கைகள், உள்ளூர் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு நடவடிக்கையிலும் பங்கெடுக்க, நூற்றுக்கணக்கானவர்கள் பதிவு செய்தனர். ஆற்றின் நெடுகிலும் கழிவு நீர் வெளியேறும் இடங்களை அவர்கள் நாடி, நீர் மாதிரியைத் திரட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பிரச்சாரம் செய்தனர். திரட்டப்பட்டுள்ள சில பத்து மாசு நீர் மாதிரிகளை அவர்கள் காட்சிக்கு வைத்து, பிரச்சார தகவலுடன், பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த இரண்டு நடவடிக்கைகள், Han Jiang ஆற்றின் நீர் தரத்தைப் பாதுகாக்கும் எண்ணத்தை உயர்த்தியுள்ளது. இது மட்டுமல்ல, Xiang Fan நகராட்சியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆற்று நீருக்குக் கடுமையான மாசு ஏற்படுத்தும் சிறிய ரக காகிதத் தயாரிப்பு ஆலைகள், அரசின் கோரிக்கைக்கிணங்க, மூடப்பட்டன அல்லது சீரமைக்கப்பட்டன.
பிரச்சார நடவடிக்கையின் பயனை வலுப்படுத்தும் பொருட்டு, "பசுமையான Han Jiang" என்னும் இணைய தளத்தை அவர்கள் நிறுவியுள்ளனர். இரு மூதாட்டியர் மற்றும் அவர்களின் சங்கம், Han Jiang ஆற்றின் கரையோரத்தில் மேலதிக மக்களால் அறிந்து கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் தொண்டர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலக வங்கி மற்றும் உலக பசுமை நிதியம் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், அவர்களின் சங்கத்தின் பணிகள் மேலும் அதிகமாகியுள்ளன. 1 2 3 4 5
|