• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 14:51:35    
'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை

cri

பண்பாட்டுத் துறையில்

பண்பாட்டுச் சிதிலங்களை ஏராளமாகக் கொண்டிருக்கும், குறிப்பாக உலக அதிசயங்கள் இடம்பெற்றிருக்கும் சீனாவும், இந்தியாவும் சுற்றுலாத் துறையில் தங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதும் இன்றியமையாதது. நாதுலாக் கணவாய் வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டு சுற்றுலாத் துறைக்கும் அது நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியுள்ளது. நாதுலாக் கணவாயிலிருந்து 35 மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் காங்டாக் நகருக்கும், நாதுலாக் கணவாயிலிருந்து 320 மைல் தொலைவிலுள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா நகருக்கும் இடையே பேருந்து போக்குவரத்து துவக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகின்றேன். பண்டைக் காலத்தில் இந்தியாவையும் சீனாவையும் இணைத்த பட்டுப் பாதை மீண்டும் உயிர் பெற்றால், சுற்றுலாத் துறையும் வளமடையும். கடல் மட்டத்திலிருந்து 14200 அடி உயரத்தில் உள்ள நாதுலாக் கணவாய் திறக்கப் பட்டவுடன், புதுதில்லியையும் பெய்ஜிங்கையும் இருப்புப் பாதை இணைக்கும் கற்பனை என்னுள் விரிந்தது. அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் வகையில், இருநாடுகளின் பல்வேறு இடங்களில் மேலும் பல துணைநிலைத் தூதரகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிற நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கையும் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளன. பரிமாற்ற ஒத்துழைப்பின் மூலம், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாக் கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும்.

கல்வித் துறையில்

அமெரிக்கா போன்ற சில மேலை நாடுகளின் அறிவியல் மூளையாக சீனர்களும் இந்தியர்களும் செயலாற்றுகின்றனர். இவர்களின் கல்வி அறிவு, ஏதோ ஒரு மூன்றாவது நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, சீனர்களும் இந்தியர்களும் தங்களின் தாய்நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட நெறிமுறை ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கல்வியாளர்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். மாணவர்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் சீனா மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், தங்களுக்குள் பரிமாற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய விரைவான காலக்கட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பு தவிர்க்க இயலாதது. எனவே, இருநாடுகளுக்கும் பொதுவான பிரச்னைகளான, இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு மற்றும் அவற்றைக் கண்டறிதல், மீன்வளம் பெருக்குதல் போன்ற துறைகளில் உடன்படிக்கைகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் யாவை என்பதையும் கண்டறிய முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலகில் மக்கள் தொகை மிக அதிகமாகக் கொண்ட சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தத்தமது பட்டறிவை பரிமாறிக் கொள்ளலாம். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுப் பணிகளில் முன்னேற்றம் அடைந்துள்ள சீனாவைப் போல இந்தியாவும் பல குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்தி வெற்றி காணலாம். மேலும், மக்கள் தொகையைச் சார்ந்த அது வேலைவாய்ப்புப் பிரச்னை. சீனாவிலும் இந்தியாவிலும் ஆண்டுதோறும் ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டால், சீனாவும் இந்தியாவும் மேலும் சிறந்த எதிர்காலத்தைப் பெறும். எனவே வேலைவாய்ப்புப் பிரச்னையை அகற்றி, அதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சீனாவும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், இருநாடுகளின் நல்லுறவுக்கு வழிவகுக்கும் இதரத் துறைகளை அறிய உயர்நிலைப் பிரதிநிதிகளின் கூட்டுக் கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும்.

1 2 3 4 5