• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 14:51:35    
'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை

cri

சீன வானொலியின் கட்டுரை ஒன்றின் மூலம், இலங்கையின் நேயர் மன்றத் தலைவர் தனது கண்களை சீன நண்பர் ஒருவருக்கு தானம் செய்தார் என்ற செய்தியைக் கேட்டபோது, என் மனம் கசிந்ததோடு மட்டுமன்றி எனக்கும் ஒரு யோசனை தோன்றியது. நானும், என்னையொத்த கருத்தையுடைய நண்பர்களும், சீன நண்பர்களுக்காக கண்தானம் வழங்கினால் என்ன என்னும் யோசனை என்னுள் தற்போது இருந்து கொண்டே இருக்கிறது.

அமெரிக்கா போன்ற சில நாடுகளில், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில், ஆண்டுதோறும் மனித உரிமை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு, அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாள்தோறும் எண்ணற்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நடந்து கொண்டேயிருக்கும் நிலையிலும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சீனாவின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பொறாமையுணர்வின் காரணமாக அமெரிக்கா வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில், அமெரிக்காவின் கருத்துக்களை மறுத்து அமெரிக்காவின் 'The Voice of America'வானொலிக்கு நான் கடிதங்களை அனுப்புவேன். இந்தியாவிலிருந்து இதுபோன்ற எதிர்ப்புக் குரல்கள் சென்றால், அமெரிக்கா தன்னுடைய தவறுகளை உணர்ந்து கொள்ளுவதோடு மட்டுமின்றி, இந்தியாவிலிருந்து வரும் குரல்கள் நட்பின் அடிப்படையிலானவை என்பதையும், அதன் வீச்சையும் புரிந்துகொள்ளும். எதிர்காலத்திலும் வானொலி கேட்பவர்கள், வானொலி மீதான இயல்பான ஆர்வம் கொண்டவர்களாகவும், தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். மாறாக, சீன வானொலி நேயர்கள் மட்டுமே சீன-இந்திய நட்புறவின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த

20 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக சீன வானொலியின் நேயராக இருக்கும் நான், சீனா மீது அளவற்ற அன்பும், சீன-இந்திய நட்புறவின் மீது ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டுள்ளேன். எனது இரத்தத்திலேயே ஊறிவிட்ட இந்த உணர்வு, எந்த நிகழ்வுகளாலும் அகற்றப்பட முடியாதது. இந்த மாறா உணர்வைப் பயன்படுத்தி காலமெல்லாம் சீன-இந்திய நட்புறவுக்கு முழுமூச்சுடன் பாடுபடுவேன் என உறுதி கூறி

விடைபெறுகிறேன்.  வளர்க சீன-இந்திய நட்புறவு!
நன்றி. வணக்கம்.

                                                                         அன்புடன்,
                                      
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.


1 2 3 4 5