• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 14:51:35    
'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை

cri

என்னால் என்ன முடியும்?

இதுவரையில் நட்புறவை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி எனது விருப்பத்தை தெரிவித்த நான், இனி இந்திய சீன நட்புறவுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் தெரிவிக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தீவிர நேயராக நான் இருக்கும் நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீன-இந்திய நட்புறவு பற்றிய பிரச்சாரத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடம் மேற்கொள்வேன். சீன வானொலியைக் கேட்பது கூட சீன-இந்திய நட்புறவு செயல்பாடுகளின் ஒரு பகுதிதான் என்பதை நான் உணருகிறேன். எனவே, செயல்பாட்டில் வேகத்தைக் கூட்டி, மேலும் அதிகமானோருக்கு சீன வானொலியை அறிமுகம் செய்வேன்.

இந்திய சீன நட்புறவுக் கழகம் நாடு தழுவிய அளவில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும், அதன் தமிழகக் கிளை இதுவரையில் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்திய சீன நட்புறவுக் கழகத்தின் தமிழகக் கிளையை நிறுவ உரிய முயற்சிகளை மேற்கொள்வேன். அந்த முயற்சிகள் வெற்றி பெற்ற பின்பு, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் சீன இந்திய நட்புறவுக் கழகத்தை நிறுவ நடவடிக்கைகளை எடுப்பேன். இந்நடவடிக்கைகள் முழுமையான பின்னர், இவ்வமைப்புக்களின் உதவியுடன் சீன-இந்திய நட்புறவு வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுவேன். சீன வானொலியின் பிரதிநிதிக்குழு இப்போது அடிக்கடி இந்திய நட்புறவுப் பயணத்தை மேற்கொள்கின்றது. அவ்வாய்ப்புக்களை இறுகப்பற்றி, சீன நண்பர்களின் உதவியுடன், சீன-இந்திய நட்புறவின் அவசியம் பற்றி அனைவரிடம் நல்ல பிரச்சாரம் செய்ய முடியும். ஏற்கனவே, பிரதிநிதிக்குழுவின் பயணங்களின் போது பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் நல்ல விளம்பரமும் நல்லுணர்வும் கிடைத்திருக்கின்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற நட்புறவுப் பயணங்களை பயன்படுத்தி, சீன-இந்திய உறவின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவேன்.

அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்றத்தின் 17 கருத்தரங்குகள் இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றிருக்ககின்றன. இனிவரும் காலங்களில், தலைமை நேயர் மன்ற கருத்தரங்குகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சீன-இந்திய நட்புறவு பற்றிய பிரச்சாரத்தை வலுப்படுத்துவேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டில், நண்பர்களுடன் இணைந்து, இருசக்கர வாகனங்களின் மூலம் 2 நாட்களில் சுமார் 750 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நேயர்களை நண்பர்களுடன் சந்தித்து மகிழ்ந்தேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வழிநெடுகிலும் பொது மக்களிடையே சீன-இந்திய நட்புறவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பேன்.

எதிர்காலத்தில் தரைவழியாக சீனாவுக்கு நண்பர்களுடன் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது எங்கள் பயணம் அமையலாம். நண்பர்களுடன் சீனப் பயணம் மேற்கொள்ளும்போது, நட்புறவின் முக்கியத்துவத்தை அறிவிக்கும் பல்வகை பதாகைகளை ஏந்திச் செல்வேன். அரசு மற்றும் பொதுமக்களின் வரவேற்புடன் எங்களின் பயணம் முழு வெற்றி அடையும் என நம்புகின்றேன்.

சீன-இந்திய நட்புறவின் சின்னமாக, தனி இணைய தளம் ஒன்றை நிறுவும் யோசனையும் எனக்கு உண்டு. வாய்ப்பும், வசதியும் கிடைக்கும்போது நட்புறவுக்கான இணையம் ஒன்றை நிறுவுவேன்.

தற்போது சீன வானொலி தமிழ்ப்பிரிவு நேயர்களுக்காக நண்பர்களுடன் இணைந்து 'சீன வானொலி மன்றம்' என்ற காலாண்டிதழை தயார் செய்து நேயர்களுக்கு அனுப்பி வருகிறேன். எதிர்காலத்தில் இவ்விதழை திங்களிதழாக மாற்றி, அதில் நட்புறவு தொடர்பான செய்திகளையும் அதிக அளவில் இடம்பெறச் செய்வேன்.

எதிர்காலத்தில் சீன-இந்திய நட்புறவுச் செய்திகளை, அதிக அளவில் உறுப்பினர்களுக்கு அனுப்பி சீன-இந்திய நட்புறவுக்கு பாடுபடுவேன்.

கடந்த கால அனுபவங்களின் காரணமாக, சீன-இந்திய நட்புறவு பற்றிய ஏராளமான செய்திகளை திரட்டி வைத்துள்ளேன். எதிர்காலத்தில் பண்டைய நட்புறவு, நட்புறவு வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆய்வு செய்து, நூல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன். இந்த நூல், இருதரப்பின் உறவின் அவசியத்தை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதாக அமையும்.

கடந்த காலங்களில் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது விழுப்புரம் மன்றத்தின் சார்பில் நிதியுதவியை வழங்கியிருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகள் நடைபெறும் போது, நிதியுதவியை வழங்கி ,சீனாவைப் பற்றிய நல்லெண்ணத்தை இந்திய மக்களிடையே விரிவாக்குவேன்.

சீனா அவ்வப்போது கடும் மழை, புயல், வெள்ளம், பறவைக் காய்ச்சல் போன்ற பேரிடர்களால் பாதிப்பை சந்திக்கின்றது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், சீனர்களுக்கு துணையாக, இயற்கைச் சீற்றத்தை எதிர்த்து பேராட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைப்பின், இந்திய மற்றும் சீன அரசுகளின் உரிய அனுமதியைப் பெற்று நண்பர்களுடன் சீனாவுக்கு சென்று மீட்புதவி நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்தி சீன-இந்திய நட்புறவுக்கு சிறந்த முறையில் எனது பங்கையளிப்பேன்.

1 2 3 4 5