நாள்தோறும் ren fei li, மகள்களுக்கு 4 மணி நேரம் குணமடைதல் பயிற்சியளித்தார். அயரா முயற்சி மூலம், 2003ம் ஆண்டு அவரது மூத்த மகளால் எழுந்து, நிற்க முடிந்தது. இது குறித்து ren fei li அம்மையார் கூறியதாவது,
அவர் நிற்க முடிந்த போது, நான் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதேன். கடந்த சில ஆண்டுகளில் நான் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் இல்லாமல் இல்லை. என் முயற்சி, இறுதியில் பயன் பெற்றது. என்றார் அவர்.
தவிர,மகளின் தாழ்வெண்ணத்தைச் சமாளிக்கும் வகையில், துணிவுடன் வாழ்ககையை எதிர்கொள்ள, அவர் தனது மகளை ஊக்குவித்தார். இணையதளப் போட்டி முதலிய நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார். ஊனமுற்றோர், சமூகத்தில் சமமாக வாழ்கின்றனர் என்று தன், மகளை உணரச் செய்தார். சீன மொழி, கணிதவியல் முதலியவை தவிர, கணினியையும் ஆங்கில மொழியையும் கற்பித்தார். ren fei li அம்மையார் கூறியதாவது,
பிறரின் அனுதாபம், அவர்களுக்கு தேவையற்றது. போதிய அறிவு இருந்தால், அவர் பள்ளிக்கு செல்ல முடியாத போதிலும், அவர், செறிவடைய முடியும். நான் அவர்களை கணினி தொழில்நுட்பத்தையும், ஆங்கில மொழியில் சில எளிதான சொற்களையும் கற்பித்தேன். தற்போது அவர்கள் இணையதளம் மூலம் தானாக கற்றுக் கொள்ள முடியும் என்றார் அவர்.
1 2 3 4 5
|