தீபத்தொடரோட்டம் நடைபெற்ற போது, ren fei liஇன் மகள்கள், கை அசைத்து, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காகவும் தங்களது தாயிற்காகவும், ஆரவாரம் செய்தனர். செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, அவர்கள், தட்டுத் தடுமாறி தங்கள் தாய்க்கு நன்றி தெரிவித்தனர்.
அம்மா எங்களை வளர்ப்பது மிக கடினம். நான் அவருக்கும், கடந்த சில ஆண்டுகளில் எங்களுக்கு அளித்த கவனத்திற்கும், மிகவும் நன்றி செல்ல கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய ஒரு அம்மாவை பெற்றதில், பெரும் மனநிறைவு அடைகிறேன்.
2012ம் ஆண்டின் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது, தனது மகள்களின் மிகப் பெரிய விருப்பமாகும் என்று ren fei li கூறினார். தற்போது, அவர், மகள்களுக்கு boccia என்ற போட்டிக்கான பயிற்சிக்கு வழிகாட்டி வருகிறார். ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபம் ஏந்தியவராக மாறியது, மகள்களுக்காக அவர்களது கனவின் அடிப்படையை நனவாக்குவதற்கு சமம் என்று அவர் தெரிவித்தார்.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஏந்தியவராக மாறியது, என் வாழ்க்கையிலான மிகப் பெரிய புகழாக மாறியது மட்டுமல்ல, என் ஊனமுற்ற மகள்களின் விருப்பத்தையும் நனவாக்கியது. இத்தீபத்தொடரோட்டம் மூலம், தன் வலிமை, தன் திறனைத் தாண்டுதல், நம்பிக்கையார்வம், பாடுபடுதல் ஆகிய ஊனமுற்றோரின் எழுச்சிகளை மேலும் அதிகமானோர் உணர வேண்டும் என்று, நான் விரும்புகிறேன்.
நேயர்களே, இதுவரை, பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் ஏந்தியவரான ren fei li பற்றி கேட்டீர்கள். அவரது இரு மகள்கள், கூடிய விரைவில் குணமடைந்து நலமுடன் வாழ வாழ்த்துகிறோம். இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. 1 2 3 4 5
|