இணைய தளம் நிறுவப்பட்டது முதல், ren fei liஇன் பங்கு முற்றிலும் மாறியது. அவர், மூளைக்கடுத்த திமிர்வாதம் இருந்த இரு குழந்தைகளின் தாய் மட்டுமல்ல, இந்த நோய்வாய்ப்பட்ட அனைத்து குழந்தைகளையும் அரவணைக்கும் அத்தையாகவும், ஒரு இணையதளத்தின் நடத்துனராகவும் மாறினார். இதுவரை, அவரது இணையதள மூலம், 12 ஆயிரத்துக்கு மேல் முறையாக தொடர்புடைய ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளில், குழந்தைகளைக் குணமாக்கும் வகையில், ren fei li பத்தாயிரம் யுவானுக்கு மேல் செலவிட்டார். மருத்துவமனை மற்றும் பல நல்ல மனிதர்களின் உதவியில்லாமல், வாழ்க்கை நடத்தும் திறனும் நம்பிக்கையும் தனக்கு இல்லை என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது,
என் மகள்களுக்காக, நான் என் கணவனை இழந்தேன். என் இளைய காலத்தை இழந்தேன். ஆனால், நான் புரிந்துணர்வும் ஆதரவும் உதவியும் பெற்றேன். என் குழந்தைகள், மேலும் அதிக அன்பும் குணமடையும் வாய்ப்புகளும் பெற்றனர். இழந்ததை விட, நாங்கள் பெற்றவை மிக அதிகம்.
1 2 3 4 5
|