• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:39:23    
சீன ஊனமுற்றோர் கலைக்குழுவின் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாங் சின்தியென் அ

cri

ஆகஸ்டு திங்கள் 28ம் நாள், 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் பெய்சிங்கிலான சொர்க்கக் கோயிலில் ஏற்றப்பட்டதோடு, தீபத்தொடரோட்டம் சீனாவில் நடைபெறத் துவங்கியது. முழு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, விஞ்சும் தன்மை, ஒருமைப்பாடு, பகிர்தல் ஆகியவற்றின் சின்னமாக அமைந்த இத்தீபம், உலகின் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அவர்களது முன்னேற்றப் பாதையை ஒளியூட்டும். சீனாவின் 8.3கோடி ஊனமுற்றோரின் பிரதிநிதியாக, சீன ஊனமுற்றோர் கலைக்குழுவின் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாங் சின்தியென் இத்தீபத்தை ஏற்றினார். அவரது அனுபவம், விஞ்சும் தன்மை, ஒருமைப்பாடு, பகிர்தல் என்ற பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியின் முழக்கத்தை நேர்த்தியாகவும் முழுமையாகவும் வெளிக்காட்டுகிறது.
1 2 3 4 5