
படிப்படியாக, சியாங் சின்தியென் சமூகத்தில் பங்கெடுத்ததோடு, தாயின் எதிர்பார்ப்பையும் பெரிதும் தாண்டினார். மகளின் பரிமாற்றப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, சியாங் சின்தியென் ஆடை வடிவமைப்பாளராக மாற வேண்டும் என்று செவௌ லின் விருப்பம் தெரிவித்தார். ஆனால், உறுதியான பண்பைக் கொண்ட சியாங் சின்தியென் தமது பாதையைத் தேர்ந்தெடுத்தார். 2003ம் ஆண்டு, உலக அழகிப் போட்டியில் பங்கெடுப்பதில் பதிவு செய்வதென, அவர் முடிவு செய்தார். அழகு, தன்னம்பிக்கை மற்றும் அன்பால், அவர் சீனப் போட்டியில் 6வது இடம் வகித்ததோடு, சர்வதேசச் சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். சீன ஊனமுற்றோர் கலைக் குழுவில் கலந்து கொள்வது, அவரது விருப்பமாகும். அதே வேளையில், ஊனமுற்றோர் கலைக் குழு, தனிக் குணாதிசயத்தைக் கொண்ட செவிப்புலனற்ற இந்தச் சிறுமியை விரைவாக கவனிக்கத் துவங்கியது. இக்குழு தமது ஊனமுற்றோர் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் பற்றி யோசித்த போது, முதலில் சிந்தித்த வேட்பாளர் சியாங் சின்தியென் ஆவார். அவரது விருப்பம் உண்மையாக மாறிய பிறகு, 2004ம் ஆண்டு மார்ச் திங்கள், கலைக்குழுவுடன் சேர்ந்து தென் கொரியாவில் கலைநிகழ்ச்சிகளை நடத்திய போது அவரது திறமை பல்வேறு தரப்புகளின் பாராட்டை பெற்றது. அதற்கு பின், ஆண்டுதோறும் சியாங் சின்தியென் வெளிநாடுகளில் பத்துக்கு அதிகமான முறை கடமையாற்றினார். இது குறித்து, அவரது தாய் கூறியதாவது
அவர் பல முறை முக்கிய செல்வாக்கு வாய்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். உலக அழகி, போட்டி 2005ம் ஆண்டு சீன மத்திய தொலைக் காட்சி நிலையத்தின் வசந்த விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சி, 2004ம் ஆண்டு ஏதன்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டார். தவிர, எமது நாட்டின் அரசுத் தலைவர், வெளிநாடுகளின் அரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள் ஆகியோர் அவரைச் சந்தித்துரையாடினர் என்றார் அவர். 1 2 3 4 5
|