• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-22 14:35:02    
Etles பட்டு பின்னும் ஓர் உய்கூர் இன குடும்பம்

cri

சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், வட மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. இங்கு உய்கூர் இன மக்கள் தொகை மிக அதிகம். சிங்கியாங்கின் தென் பகுதியில் உள்ள He Tianனில், மூன்று மூலச்செல்வங்கள் உண்டு. அவை, மணிக்கல், தரைக்கம்பளம், Etles பட்டு ஆகும். இன்றைய நிகழ்ச்சியில், "Etles பட்டு பின்னும் ஓர் உய்கூர் இன குடும்பம்" பற்றி கூறுகின்றோம்.

He Tianவின் Ji Ya வட்டம், பண்டைக்காலத்தில் பட்டுப் பாதையில் இன்றியமையாத இடத்தை பெற்றிருந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹான் வம்சத்தில், திருமணம் செய்யப்பட்டு, இங்கு வந்த ஓர் இளவரசி பட்டுப்பூச்சிக்கூடு ஒன்றை தமது தலைமுடியில் மறைத்து, இன்றைய Ji Ya வட்டத்துக்குக் கொண்டு வந்தார். பட்டுப்பூச்சிகளை வளர்ப்பது, பட்டுப் பூச்சியிலிருந்து நூலை தயாரிப்பது, பட்டுநூல் பின்னுவது முதலியவை பற்றி அவர் உள்ளூர் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தார். அது முதல், அவ்விடத்தில் அனைத்து குடும்பங்களும், Etles பட்டு பின்னி, சாயம் போட தெரிந்திருந்தன. கையால் பட்டு பின்னும் தலைசிறந்த நுட்பம் தலைமுறை தலைமுறையாக இன்று வரை பரவி வருகிறது.

1 2 3 4 5