

Ji Ya வட்டத்தின் Kaletugeman கிராமத்தில், உய்கூர் இனத்தவர் Nu Er Mai Mai Tiயும் அவருடைய குடும்பத்தினரும், Etles பட்டு பின்னுவதில் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர். Ji Ya வட்டத்தில் Nu Er Mai Mai Ti கையால் பட்டு பின்னுபவர். அவருடைய மூதாதையரும், Etles பட்டு பின்னியவரே. இவர், மூன்றாவது தலைமுறையினர் ஆவார். தனக்கு 8 வயதான போது, அவர் Etles பட்டு பின்னல் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இப்போது 35 ஆண்டுகால அனுபவம் அவருக்கு இருக்கிறது. இந்நுட்பத்தை தமது மகன் Mu Ta Li Fuக்கு அவர் கற்றுக்கொடுத்துள்ளார். தற்போது அவரும், அவருடைய மனைவியும், மூலப்பொருட்களை வாங்குவதற்கும், பட்டு விற்பனை செய்வதற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.
1 2 3 4 5
|