

Ji Ya வட்டத்தில், Nu Er Mai Mai Tiயின் குடும்பம் போல், 1850 குடும்பங்கள் பட்டு பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு அவ்வட்டம் முழுவதும், பின்னப்பட்ட பட்டு அளவு, 3 இலட்சம் சுருள்களை எட்டியுள்ளது. இலாபம், ஒரு கோடி யுவானை எட்டியுள்ளது. மேலதிக விவசாயிகள், பட்டு பின்னல் மூலம் வருமானம் அதிகரிப்பதற்குத் துணை புரியும் பொருட்டு, சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேச அரசு, சிறப்பு நிதித் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. Ji Ya வட்டத்தில், Etles பட்டு தொழிற்சாலை நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலை, பட்டு பின்னல் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முன்னணித் தொழில் நிறுவனமாக மாறியுள்ளது.
இது வரை, Ji Ya வட்டத்தில் Etles பட்டு பின்னல் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற மூத்த கைவினைஞர்களின் எண்ணிக்கை, 20 பேருக்கு உட்பட்டதாகும். வட்ட அரசு குறிப்பிட்ட காலத்தில், தொழிற்சாலையில் தொடர்புடைய பட்டு பின்னும் நுட்பப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது. அதனால் மூத்த கைவினைஞர்கள், தமது நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இவ்வாண்டு Nu Er Mai Mai Tiயின் மகன் Mu Ta Li Fuக்கு வயது 18. உயர் நிலை பள்ளியிலிருந்து பட்டம் பெற்றப் பின், தமது தந்தையிடமிருந்து இந்நுட்பத்தை அவர் கற்றுக்கொள்ளத் துவங்கினார். தவிர, பட்டு பின்னுவதில் தமது தந்தைக்கு அவர் உதவி செய்கிறார். அவர் கூறியதாவது:
"எனது தந்தையிடமிருந்து இந்நுட்பத்தைக் கற்று தேர வேண்டும். என் தங்கை, படிப்பை முடித்த பின், இந்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நான் ஓட்டுனராக பின்னப்பட்ட பட்டு துணியை ஏற்றிச்சென்று, விற்பனை செய்ய வேண்டும். இது எனது கனவு" என்றார், அவர்.
1 2 3 4 5
|