

"ஆண்டுதோறும், 4 ஆயிரம் மீட்டர் நீளமுடைய பட்டு பின்னுகின்றோம். நிகர வருமானம், 10 ஆயிரம் யுவான் ஆகும். தொலைக்காட்சிப்பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, மோட்டார் மிதிவண்டி ஆகியவற்றை வாங்கியுள்ளோம். முன்பு இவை அனைத்தும் இல்லை. ஆடுகளை வாங்கினோம். தற்போது, 8 ஆடுகளை வளர்க்கின்றோம்"என்றார், அவர்.
கையால் பட்டு பின்னுவது கடினமானது. அதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற திறமைசாலி, ஒரு நாள் மூன்று மீட்டர் மட்டுமே பட்டு பின்ன முடியும். உள்ளூர் பிரதேச அரசு, Etles பட்டுத் தொழிலின் வளர்ச்சியை ஆதரிக்கும் பொருட்டு, 2002ஆம் ஆண்டு Nu Er Mai Mai Tiயின் குடும்பத்துக்கு நெசவு இயந்திரம் ஒன்றை வழங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன், அவருடைய வீட்டில் உள்ள நெசவகத்தைச் சீரமைக்க, உள்ளூர் அரசு உதவித்தொகை வழங்கியது. இயந்திரத்தைப் பயன்படுத்திய பின், பட்டு பின்னல் வேகம் அதிகரித்துள்ளது. Nu Er Mai Mai Tiயின் மனைவி Ai Bi Bu Han கூறியதாவது:
"கையால் ஒரு சுருள் பட்டு பின்னும் நேரத்தில், இயந்திரத்தைப் பயன்படுத்தினால், 4 சுருள் பட்டுகள் பின்ன முடியும். இயந்திரத்தினால் பின்னப்படும் பட்டின் தரம் சிறந்ததாய் இருக்கிறது. "என்றார், அவர்.
1 2 3 4 5
|