
கடந்த சில திங்களில், முக்கிய நாடுகளின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார வளர்ச்சியை இடைவிடாமல் பாதித்தது. உலகப் பொருளாதாரத்தில் சேர்ந்து வருகின்ற சீனாவும் இதற்கு விலக்கல்ல. வர்த்தகக் கூட்டாளிகளின் இறக்குமதி குறைந்தது. சீனாவில் வெளிநாட்டு முதலீட்டின் அதிகரிப்பும் மந்தமடைந்தது. அதனால், சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகமும் குறைவடைவது திண்ணம். இது பற்றி. சீனப் பொருளாதார நிபுணர் cheng siwei கூறியதாவது,
நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சி, நம் நாட்டின் ஏற்றுமதியையும், சாதகமான நிலுவைத் தொகையையும் குறைப்பது திண்ணம். அதனால், சீனாவின் பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைவடையும். இவ்வாண்டின் அதிகரிப்பு, சுமார் 10 விழுக்காடாக இருக்கும் என்று நான் மதிப்பிடுகிறேன் என்றார் அவர்.
1 2 3 4 5 6
|