
சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை ஆர்வம் கொள்கின்ற இத்தகைய மதிப்பீடுகளால், சில வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், சீனச் சந்தை மீது மேலும் அதிக ஆர்வம் செலுத்துகின்றன. உலகப் பொருளாதாரத்தின் கொந்தளிப்புக் காலக்கட்டத்தில், சீனாவில், மேலும் அதிக பயன் பெறுவதை அவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஐரோப்பிய AIRBUS தொழில் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி Tomas Enders அவர்களில் ஒருவராவார்.
சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இது ஒரு மிகப் பெரிய சந்தையாகும். அடுத்த 20, 30 ஆண்டுகளில், எங்களைப் பொருத்தவரை, சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போல் சமநிலை அடைவது உறுதி. நாங்கள் சீனாவில் வெற்றியடைய விரும்புகிறோம். சீனாவின் பயணி விமான சேவை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். இது, எங்கள் எதிர்கால உத்தியாகும் என்றார் அவர்.
சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கைத் தவிர, அமெரிக்காவின் இரண்டாம் தர நிதி நெருக்கடியும் இந்த டாவோஸ் கருத்தரங்கில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்ட மையப்பிரச்சினையாகும். சீன நிதித் துறை வெளிநாட்டில் முதலீடு செய்வதில், மிக கவனமான மனப்பாங்கைக் கடைப்பிடிக்கிறது. அமெரிக்காவின் பல வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் மூடியமை, சீன நிதித் தொழிலுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தாது என்று சீனப் பொருளாதார நிபுணர் cheng siwei தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது,
சீன தொழில் நிறுவனங்கள் வாங்கிய அமெரிக்கக் கடன் மிகக் குறைவு. சீனா வாங்கிய Lehman Brothers உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களின் கடன் பத்திரங்களின் மொத்தத் தொகை, சில பத்து கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. அதனால், இந்த நிதி நெருக்கடி சீனாவை பெரிதும் பாதிக்காது என்றார் அவர். 1 2 3 4 5 6
|