
இப்பின்னணியில், உள்நாட்டின் தொழில் நிறுவனங்களின் தற்சார்பான புத்தாக்கத்துக்கு ஆதரவளித்து, உற்பத்திப் பொருட்களின் மேலதிக மதிப்பை சீனா அதிகரிக்க வேண்டும். வர்த்தகத்தின் கட்டமைப்பை மாற்றி, உள்நாட்டுச் சந்தையின் தேவையை மேலும் விரிவாக்கி, வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும். இவற்றின் மூலம், பொருளாதாரத்தின் வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடியும். சீன தொழிற்துறை வணிக வங்கியின் தலைவர் jiang jianqing, சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தின் மீது பேரார்வம் காட்டுகிறார். அவர் கூறியதாவது,
சீனாவின் சுற்றுப்புற நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும் போது, சீன அரசின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் திறனும் மிக பயனுள்ளவை. இவ்வாண்டு, சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு செவ்வனே அமையும். பணவீக்கம், ஒப்பீட்டளவில் தாழ்வான நிலையில் கட்டுப்படுத்தப்படும் என்றார் அவர்.
1 2 3 4 5 6
|