• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-14 11:20:39    
சீனாவின் திபெத்திய மருத்தும் பெற்ற முன்னேற்றம்

cri

திபெத்திய மருத்துவத்தை முன்னேற்றுவதற்காக, 1985ம் ஆண்டுக்குப் பின், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு மற்றும் சுகாதார வாரியம், பத்துக்கு மேலான விதிகளை வகுத்து, வெளியிட்டன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள திபெத்திய மருத்துவக் கல்வி, அதிகாரப்பூர்வ நிலையில் படிப்படியாக நுழைந்து வருகிறது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் திபெத்திய மருத்துவ கல்லூரி, சிங்காய் திபெத்திய மருத்துவ கல்லூரி, ச்சேங் து சீன சுதேசிப் பல்கலைக்கழகத்தின் திபெத்திய மருத்துவத்துறை, கான்சூ சீன சுதேசிக் கல்லூரியின் திபெத்திய மருத்துவத்துறை முதலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பல்வேறு இடங்களுக்கு திபெத்திய மருத்துவ சிறப்புத் திறமைசாலிகளை அனுப்பியுள்ளன. தவிர, சில மருத்துவமனைகளும் அரசு சாரா வாரியங்களும், திபெத்திய மருத்துவ பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், திபெத்திய மருத்துவ சிகிச்சையில் அதிக தேர்ச்சி பெறும் திறமைசாலிகளைப் பயிற்றுவித்துள்ளன. இதன் விளையாக, அடி நிலை திபெத்திய மருத்துவ தேர்ச்சி பெற்ற திறமைசாலிகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டது. 2006ம் ஆண்டின் இறுதி வரை, திபெத்தில் மட்டும், பதி நான்கு திபெத்திய மருத்துவ நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. மாவட்ட நிலை மருத்துவமனைகளின் திபெத் மருத்துவப் பிரிவுகளின் எண்ணிக்கை அறுபதுக்கு மேலாகும். ஈராயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கு திபெத்திய மருத்துவத்தில் ஈடுபடுகின்றனர். திபெத்தைத் தவிர, சீனாவின் பத்துக்கு மேலான நகரங்களில் திபெத்திய மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. திபெத் மருத்துவத்தின் விரைவான முன்னேற்றம், வெளிநாட்டினரின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகளின் பல முக்கிய பிரமுகர்கள், திபெத்துக்குச் சென்று, திபெத்திய மருத்துவமனைகளை பார்வையிட்டனர். திபெத்திய மருத்துவப் பிரதிநிதிக் குழுவினர்கள், அழைப்பின் பேரில், அடிக்கடி வெளிநாடுகளில், பயணம் மேற்கொண்டு, திபெத்திய மருத்துவப் பாடங்களையும் மருத்துவச் சிகிச்சை அனுபவங்களையும் கற்பித்து வருகின்றனர்.

1 2 3 4 5