திபெத்திய மருத்துவ இலட்சியத்தை ஆதரித்து வளர்ப்பதற்காக, 1992ம் ஆண்டு, பெய்ஜிங் திபெத்திய மருத்துவமனை நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில் புகழ்பெற்ற திபெத்திய மருத்துவர்கள், இம்மருத்துவமனைக்கு சென்று, பணியில் ஈடுபட்டுள்ளனர். திபெத்திய மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் Nyima Tsering அறிமுகப்படுத்தியதாவது,
தற்போது, திபெத்திய மருத்துவ துறை, தேசிய விடுதலைக்கு முந்திய நிலையை விட, தலைகீழான மாற்றமடைந்துள்ளது. விடுதலைக்கு முன், திபெத்தில், பெருமளவிலான திபெத்திய மருத்துவ கல்வி நிறுவனங்கள் இல்லை. அன்றியும், இருந்த சில கல்வி நிறுவனங்கள், கட்டமைப்பில் அல்லது மருத்துவத்தை பயிற்றுவிக்கும் வழிமுறைகளில், பின்தங்கியதாக இருந்தன. ஆனால், தற்போது, திபெத்திய மருத்துவம் குறிப்பாக உயர் நிலை திபெத் மருத்துவக் கல்வி நிறுவனம் நிறுவப்பட்ட பின், திபெத்திய மருத்துவ கல்வியின் அளவிலும், வளர்ச்சியிலும், ஆசிரியர்களின் ஒட்டுமொத்த கல்வி அறிவிலும் அதிகமான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.
1 2 3 4 5
|