திபெத்தில், திபெத்திய மருத்துவ இலட்சியம், முன்னென்றும் கண்டிராத அளவில் வளர்ந்துள்ளது. மருந்து தயாரிப்பு பல தொழிற்சாலைகள், பாரம்பரிய உற்பத்தி முறைகளை நவீன உயர் அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைத்து தொழில்மயமாக்கி வளர்ந்துள்ளன. தற்போது, 20 வகைகளுக்கு மேலான திபெத்திய மருந்துகள், சீன மக்கள் குடியரசின் மருத்துவ ஆவணப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. பல வகை திபெத்திய மருந்துகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. திபெத்திய மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் Nyima Tsering அறிமுகப்படுத்தியதாவது,
கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சி, முன்னென்றும் கண்டிராத மாற்றமடைந்துள்ளது. திபெத்திய மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட, பல நாடுகளின் மக்கள் கடிதம் மூலம், விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
தற்போது, பல்வகை திபெத்திய மருந்துகள், நாடளவிலான மற்றும் சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், திபெத்திய மருந்து தயாரிப்புத் துறை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த முதுகெலும்புத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. 1 2 3 4 5
|