4 நாட்கள் நடைபெற்ற 2008 ஜிம்பாவுவே சீன வணிகப் பொருட்காட்சி, 16ம் நாள் ஜிம்பாபுவே தலைநகர் ஹராரேயில் நிறைவடைந்தது. இந்த பொருட்காட்சியின் போது, சீனா தயாரித்த பல்வகை பெரிய இயந்திரங்கள், ஜிம்பாபுவேயின் உள்ளூர் தொழில் நிறுவனங்களை ஈர்த்தது மட்டுமல்ல, உயர் தரம் மற்றும் விலை மலிவான அன்றாட வாழ்க்கைப் பொருட்களும், உள்ளூர் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டன.
ஜிம்பாபுவே-சீன நட்புறவு, வாழையடி வாழையாக நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான சிறந்த வர்த்தக உறவை வலுப்படுத்த ஜிம்பாபுவே அரசு பாடுபடும் என்று 13ம் நாள் நடைபெற்ற இப்பொருட்காட்சியின் துவக்க விழாவில், ஜிம்பாபுவே பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் Sylvester Nguni தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஜிம்பாபுவே மற்றும் சீனாவின் அரசியல் உறவு, மிகவும் உறுதியானது என்பது அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், நாங்கள் இன்றியமையாத நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம். இரு தரப்பின் வர்த்தக வளர்ச்சியில், மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் காணப்படுகிறது. இரு நாட்டுப் பொருளாதார வர்த்தகத்தை ஜிம்பாபுவே அரசு பயன்தரும் முறையில் முன்னேற்றும் என்று சீன முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதியளிக்கின்றோம் என்றார் அவர்.
1 2 3 4 5
|