
2008 சீன வணிகப் பொருட்காட்சி, ஜிம்பாபுவேயில் நடைபெற்ற முதலாவது சீனப் பொருட்காட்சியாகும். தற்போது, ஜிம்பாபுவேயில், கடுமையான பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், வணிகப் பொருட்கள் மிகவும் குறைந்துள்ள நிலைமையில், சுமார் 30 சீனத் தொழில் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வணிகப் பொருட்களை ஜிம்பாபுவேக்கு கொண்டுசென்றுள்ளன. இந்த வணிகப் பொருட்கள், உள்ளூர் பிரதேசத்தின் சந்தைகளை செழிப்பாக்கியுள்ளன. சில வணிகப் பொருட்களை வாங்குவதற்கு சிரமம் என்ற நிலை மாறியுள்ளது.
சீனாவுக்கும் ஜிம்பாபுவேக்குமிடையில் தொலைவு வெகு நீண்டதாக இருக்கின்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை இரு நாடுகளும் தொடர்ந்து ஆழமாக்கியதால், சீன வணிகப் பொருட்களை ஜிம்பாபுவே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். இது குறித்து, ஜிம்பாபுவேயிலுள்ள சீனத் தூதர் yuannansheng கூறியதாவது:தற்போது, ஜிம்பாபுவேயில் சீன வணிகப் பொருட்களை எளிதாக வாங்கலாம். பெரிய இயந்திரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் இதில் அடங்குகின்றன. உயர் தரம் மற்றும் குறைந்த விலையுள்ள சீன வணிகப் பொருட்களை ஜிம்பாபுவே மக்கள் மிகவும் விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.
1 2 3 4 5
|