தற்போது, ஜிம்பாபுவேயின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இவ்வாண்டு, இரு தரப்பு வர்த்தகத் தொகை, 50 கோடி அமெரிக்க டாலரை தாண்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதேவேளையில், ஜிம்பாபுவேயில் நேரடி முதலீடு செய்யும் இரண்டாவது பெரிய நாடாக சீனா இருக்கிறது.
மேலதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள், ஜிம்பாபுவேயில் முதலீடு செய்து தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் சீனாவிலான ஜிம்பாபுவே தூதர் Chris mutsvangwa தெரிவித்தார். அவர் கூறியதாவது:
சீனத் தொழில் நிறுவனங்கள், ஜிம்பாபுவேயில் நுழைவது, எளிதானது. சிறந்த அடிப்படை வசதிகள், திறமைசாலிகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. தவிர, சீன மக்களுடன் ஒத்துழைக்க ஜிம்பாபுவே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். சீனத் தொழில் நிறுவனங்கள், தெற்கு ஆப்பிரிக்கப் பிரதேசத்தில் நுழைந்து நடைபயில உதவும் ஒரு கதவாகவே ஜிம்பாபுவே இருக்கிறது. இந்த பிரதேசம், சீனத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நேயர்கள் இது வரை, ஜிம்பாபுவே மக்கள் விரும்பும் சீன வணிகப் பொருட்கள் பற்றி கேட்டீர்கள். 1 2 3 4 5
|