பெரிய இயந்திரங்களை தவிர, அன்றாடத் தேவைகளுக்கான சீன வணிகப் பொருட்கள் ஜிம்பாபுவே மக்களால் மென்மேலும் வரவேற்கப்பட்டு வருகின்றன.
சீன மின்சார கருவிகள், வேளாண் இயந்திரங்கள், விளக்குகள், சூரிய மின்னாற்றல் பொருட்கள், உலோகப்பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு மின்சாரக் கருவிகள் முதலியவை, இந்தப் பொருட்காட்சியில் இடம்பெற்றன. சீன உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்து பரவல் செய்யும் வாய்ப்பை வழங்கி, சீனத் தொழில் நிறுவனங்கள், ஜிம்பாபுவே சந்தையை பன்முகங்களிலும் புரிந்துகொள்வதற்கு இந்த பொருட்காட்சி துணை புரிந்துள்ளது. இனிமேல், உள்ளூர் பிரதேச தேவைக்குப் பொருந்திய மேலதிகமான சீன வணிக உற்பத்திப் பொருட்களை ஜிம்பாபுவேக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜிம்பாபுவேயிலுள்ள சீன தூதரகத்தின் பொருளாதார உறுப்பினர் huming தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
2008 சீன வணிகப் பொருட்காட்சி, ஜிம்பாபுவேயில் நடைபெற்ற முதலாவது சீனப் பொருட்காட்சியாகும். மென்ரகத் தொழிற் துறை உற்பத்திப் பொருட்கள், நெசவு உற்பத்திப் பொருட்கள் முதலியவை, இங்குள்ள சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. அடுத்து முறை, இங்கு நன்றாக விற்பனை செய்யப்பட்ட வணிகப் பொருட்களை ஆராய்ந்து, உற்பத்திப் பொருட்களின் வகைகளை விரிவாக்கி, ஜிம்பாபுவேயின் சந்தைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
1 2 3 4 5
|