
தற்போது, பெரிய வேளாண் இயந்திரங்கள், சீன-ஜிம்பாபுவே வர்த்தகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. 2006ம் ஆண்டின் இறுதி முதல், சீனத் தொழில் நிறுவனங்களிலிருந்து மூவாயிரம் பெரிய வேளாண் இயந்திரங்களை ஜிம்பாபுவே வாங்கியுள்ளது. உள்ளூர் பிரதேசத்தின் விவசாயிகள், சீன வேளாண் இயந்திரங்களை விரும்புகின்றனர் என்று ஜிம்பாபுவேயின் ஒரு முக்கிய வேளாண் இயந்திர கொள்வனவு தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த Matthew raradza என்பவர் தெரிவித்தார்.
இது பற்றி, அவர் மேலும் கூறியதாவது:
2007ம் ஆண்டு முதல், சீனாவிலிருந்து வேளாண் இயந்திரங்களை வாங்கி நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம். அவற்றை பயன்படுத்துகின்ற விவசாயிகள், சீனாவை உயர்வாக மதிப்பிடுகின்றனர் என்றார் அவர்.
1 2 3 4 5
|