• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-05 10:18:46    
சீன முஸ்லீம்களின் வாழ்க்கை

cri

தற்போதைய ning xiaவில், பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை, நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. சிறுபான்மை தேசிய இனங்களின் திறமைமிக்க ஊழியர் அணி், தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. பொருளாதாரம், தொடர்ச்சியாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. பல்வேறு சமூக லட்சியங்கள், பெரிதும் வளர்ந்துள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் பாரம்பரியப் பண்பாடு சிறப்பாக, பாதுகாக்கப்படுகிறது. ning xia சமூக அறிவியல் கழகத்தின் huiஇன இஸ்லாமிய ஆய்வகத் தலைவரும் ஆராய்ச்சியாளருமான ma ping கூறியதாவது

கடந்த 50 ஆண்டுகளாக, மூன்று உறுதியான அடிப்படைகளால், ning xiaவில், hui மற்றும் han இனங்கள், நல்லுறவை கொண்டுள்ளன. ஒன்று நடுவண் அரசு hui இனத் தன்னாட்சி பிரதேசத்தை நிறுவியமை, hui மற்றும் han தேசிய இனங்கள் மீதான சம அணுகுமுறையை உண்மையாக வெளிப்படுத்தியுள்ளது. முஸ்லீம் மக்கள், நாட்டின் உரிமையாளராக மாறியுள்ளனர். அது, அடிப்படையில், hui மற்றும் han தேசிய இன உறவின் அரசியல் அடிப்படையாக அமைகிறது. இரண்டு, சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், சிறுபான்மை தேசிய இனங்களின் குடியிருப்பிடத்தில், நடுவண் மற்றும் பிரதேச அரசுகள், huiஇன மக்களுக்கு சலுகைக் கொள்கையை வழங்கியுள்ளன. huiதேசிய இன மக்கள், வளர்ச்சி அடைந்த பிரதேச மக்களுடன் இணைந்து, பொருளாதார வளர்ச்சியின் சாதனைகளை அனுபவிக்கின்றனர். இது hui மற்றும் han தேசிய இன உறவின் பொருளாதார அடிப்படையாக அமைகிறது. மூன்று, பண்பாட்டுத் துறையில், ning xiaவின் hui மற்றும் han தேசிய இன மக்கள், பரஸ்பரப் புரிந்துணர்வும், மதிப்பும் அளித்து வருகின்றனர். இத்தகைய பரஸ்பர ஏற்பு மனப்பான்மை, hui மற்றும் han தேசிய இன உறவின் பண்பாட்டு அடிப்படையாக அமைகிறது.

1 2 3 4 5