அந்தவகையில் ஒரு சில நகரங்களின் பெயரின் பொருளை உங்களுக்கு அறியத்தருகிறோம்.
ஹார்பின்

ஹெய்லுங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரம் ஏரிகளின் நகரமென அழைக்கப்படுவதை முன்னரே குறிப்பிட்டோம். ஹார்பின் என்றால் பொருள் என்ன தெரியுமா. மன்ச்சு தேசிய இனமொழியில் ஹார்பின் என்றால் மீன்பிடி வலையை தூய்மைபடுத்தல் என்று பொருள். ஹார்பின் ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாகத்தான் இருந்தது. இருப்புப்பாதையால் வெளியுலகத்தோடு இணைக்கப்பட்டு 1932ம் ஆண்டுக்கு பின்னரே இது ஒரு நகரமாக வளர்ந்தது.
1 2 3 4 5 6 7
|