ஹொஹோட்

ஹோஹெஹாவ்தெ என்ற முழுப்பெயராலும் ஹோஹோட் என்று சுருக்கமாகவும் அழைக்கப்படுவது உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரமாகும். மங்கோலிய மொழியில் ஹோஹோட் என்றால் பசுமையான நகரமென்று பொருள். உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் ஷிலின்ஹோட் நகரம் மங்கோலிய மொழியின் படி உயரமான நகரமென பொருள்படும். அவ்வண்ணமே பாவ்து நகரம் மான்கள் நிறைந்த இடமென்றும், ஹைலார் தங்குதடையற்ற நீர்வசதியென்றும், உலன்ஹோட் செந்நகரமென்றும் மங்கோலிய மொழியில் பொருள்படும்.
பாயெனெபோ என்ற இடம் பாவ்து நகருக்கு அருகே உள்ளது, மங்கோலிய மொழியில் பாயெனெபோ என்றால் வளம்கொழிக்கும் இடம் அல்லது வளமான சுரங்கம் என்று பொருள்படும்.
1 2 3 4 5 6 7
|