• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-18 14:59:52    
தங்கப் பதக்கம் பெற்ற சீன நோஜிய தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமையகம்

cri

இக்கட்டிடம் விவேகமான தொழில் நுட்பத்துடன் கூடிய எரியாற்றல் சிக்கனத்தோடு கட்டப்பட்டுள்ளதை முதலில் விளக்கியாக வேண்டும்.

திரை போன்ற கண்ணாடி சுவர் கொண்ட செங்கோண வடிவிலான கட்டிடம் தொலைவிலிருந்து பார்த்தால் மிகவும் எளிமையானதாக தோன்றுகின்றது. அதிக ஒளியை தரக் கூடிய அளவில் உள்ள கட்டிடத்தின் உச்சி வானை நோக்குகின்றது. அதாவது கட்டிடத்தின் கண்ணாடி சுவர் மூலம் அதிக சூரிய ஒளியை நேரடியாக உள்ளே கிடைக்க செய்கிறது. இரண்டாவது மாடியின் நடைபாதையில் சூரிய ஒளி கண்ணாடி மேல்பட்டு பளப்பளக்கின்றது. பூந்தொட்டியில் வளர்கின்ற செடிகள் அலுவலக மேசைகளில் வைக்கப்பட்டு இயற்கையாக காட்சியளிக்கின்றன. அறையின் கூரையில் வரிசையாக விளக்குகளும் வெப்பக் காற்று வசதியும் பொருத்தப்பட்டுள்ளன. வெள்ளை நிறச் சுவர்கள் மக்களுக்கு மிகவும் தூய்மையான உணர்வை வழங்குகின்றன. கட்டிடத்திலுள்ள மின்சார வசதிகள் அனைத்தும் விவேகமான முறையிலான கட்டுப்பாட்டில் உள்ளன. தனிப்பட்ட அலுவலகப் பகுதியின் மின்சார இணைப்பு தனிப்பட்ட ஒவ்வொருவரிடமும் இருப்பது போன்று பொருத்தப்பட்டுள்ளது. இரவு பணிபுரியும் போது ஒருவர் அலுவலகத்தின் விளக்குகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு பதிலாக அவருடைய பணி மேசையின் விளக்கை அல்லது அவருக்கு நேர் மேலே தொங்குகின்ற விளக்கை மட்டும் பயன்படுத்தலாம். ஆகவே மின்சாரச் சிக்கனம் பணியார்களின் பணியுடன் இணைக்கப்படுகின்றது.

கட்டிடத்தின் இன்னொரு தனிச்சிறப்பியல்பு கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி சுவர் இரண்டாக இருப்பதாகும். இரண்டு கண்ணாடி சுவர்களின் இடையிலான இடைவெளி அரை மீட்டராகும். அதன் நடுப்பகுதி வெளிபுறச் சூழலிலிருந்து முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் வெப்ப காற்றும் கோடைகாலத்தில் குளிர் காற்றும் இந்த பகுதியில் நிரப்பப்படும். ஆகவே கட்டிடத்தின் உள்புறம் வெப்ப காற்றால் பாதிக்காமல் இருக்கும். இவ்வாறு வெப்ப மற்றும் குளிர் காற்று வழங்கும் இயந்திரங்களுக்கு தேவைப்படும் மின்சாரம் சாதாரண கட்டிடங்களுக்கு தேவையான மின்சார அளவை விட 14 விழுக்காடு குறைவாகும்.

1 2 3 4 5