கட்டிடத்தின் எல்லா இடங்களிலும் சிக்கலான தொழில் நுட்ப தன்மை வாய்ந்த கட்டுமானகலை உணரப்படுகின்றது.
நடைபாதைகளின் மூலைமுடுக்குயெல்லாம் வளர்கின்ற தாவரங்களால் பச்சைபசெலென உள்ளன. அவை நீர் பயன்பாட்டில் சிக்கனம் கொண்ட தாவரங்களாகும். நீரை மிக குறைவாக ஊற்றினாலே இந்த தாவரங்கள் விரைவாக வளரக் கூடியவை. அவற்றுக்கு நீர் பாய்ச்சும் குழாய்களின் கட்டுப்பாட்டுப் பகுதி தானாக இயங்கக் கூடிய தன்மை வாய்ந்தது. கழிவறையில் பயன்படுத்தப்படும் நீர் மறுசுழற்சி முறையில் மீண்டும் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு மீண்டும் சுத்தப்படுத்தப்படுகின்ற கழிவு நீர் தாவரங்கள் மற்றும் செடிகளின் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. கட்டிடத்தின் நீர் சிக்கனம் 37 விழுக்காட்டை எட்டியுள்ளது.
கழிவு நீரை மீண்டும் சுத்தப்படுத்திப் பயன்படுத்துவது தவிர கணினி மூலம் அச்சு இயந்திரம் எப்படி இயங்குகின்றது என்பதை பார்க்கலாம். நோக்கிய குழுமத்தில் பலர் அச்சு இயந்திரம் ஒன்றை பயன்படுத்துவது சுற்று சூழல் சிக்கனத்தில் ஒரு பகுதியாகும். பலர் ஒரே நேரத்தில் ஒரே அச்சு இயந்திரத்தை பயன்படுத்துவது குழுமத்தில் சாதாரண விடயமாகும். அச்சு இயந்திரம் சிறப்பு அறையில் வைக்கப்படுகின்றது. ஒவ்வொருக்கும் அச்சு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு இரகசிய எண் உண்டு. இந்த முறையில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விகிதம் பணியாளர்களால் வரவேற்கப்படுகின்றது. இதுவும் கட்டிடத்தின் சிக்கன முயற்சியில் ஒரு பகுதியாக இருக்கின்றது.
1 2 3 4 5
|