 தென் மேற்கு சீனாவின் செங் து நகரில், Montpellier இல்லம் என்ற ஒரு பண்பாட்டு இல்லம் உள்ளது. செங் து மற்றும் பிரான்ஸ் நாட்டின் Montpellier நகரால் 2006ஆம் ஆண்டில் கூட்டாக இது நிறுவப்பட்டது. செங் து மற்றும் Montpellier நகரங்களுக்கிடையில் பொருளாதாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வரும் Montpellier இல்லம், இரு நாட்டு பல்வேறு துறைகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தி வருகிறது. தற்போது Montpellier நகரத்தைச் சேர்ந்த மக்கள் பலர் செங் து நகரில் பணிபுரிந்து, கல்வி பயின்று, வாழ்கின்றனர். அவர்களும் அடிக்கடி Montpellier இல்லத்துக்குச் சென்று, சீன மொழி, சீன இசை நாடகம் முதலியவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். Montpellier இல்லத்துக்குச் சென்ற எமது செய்தியாளர் Montpellier நகரத்தைச் சேர்ந்த சில பிரெஞ்சு நண்பர்களைச் சந்தித்தார்.
"பிரான்சில் இருந்த போது சீன உணவுகளை நான் நினைத்ததுண்டு. ஆனால் சீனாவில் இருந்த போது பிரெஞ்சு உணவுகளை நினைக்கவில்லை" என்றார் அவர்களில் ஒருவர்.
1 2 3 4 5
|