• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 09:35:35    
Montpellier இல்லம்

cri

Stephanie Valette அம்மையார் அத்தகைய நண்பர்களில் ஒருவர். Montpellier நகரத்தைச் சேர்ந்த அவர், செங் து நகரத்தை மிகவும் விரும்புகிறார். செங் துவில் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துள்ள அவர், Montpellier இல்லத்தின் சீன மொழி பயிற்சி வகுப்பில் பயின்று வருகிறார். பாரிஸ் மற்றும் செங் து தமக்கு வழங்கிய வேறுபட்ட உணர்வு பற்றி அவர் கூறியதாவது—

"பலரின் பார்வையில் பாரிஸ் நகரம் காதல் உணர்வு நிறைந்த நகரமாகும். ஆனால் எனது பார்வையில், தற்போது அங்குள்ள வாழ்க்கை ஓரளவில் பரபரப்பாக இருக்கிறது. அதற்கு பதிலாக, செங் துவின் சூழ்நிலை மிகவும் அமைதியாகவும் சுவையாகவும் உள்ளது. செங் து மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையே இதற்கு காரணமாகும். இங்குள்ள மக்கள் மரியாதையுடன் செயல்படுகின்றனர். தற்போதைய பிரெஞ்சு மக்களை விட இங்குள்ள மக்கள் மேலும் பெரும் காதல் உணர்வோடு வாழ்கின்றனர் என கூறலாம்" என்றார் அவர்.

பிரெஞ்சு உணவு மிகவும் புகழ்பெற்றது. பிரெஞ்சு மக்கள் அனைவரும் உணவுச்சுவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதில் வல்லவர்கள். செங் துவின் காரமான உணவுகளை விரும்பும் Stephanie Valette, சீன உணவு சமைக்க கற்றுக் கொள்கிறார். அவர் கூறியதாவது—

"சீனாவின் tofu மிகவும் சுவையாக உள்ளது. Tofu உணவு தயாரிப்பு முறையை கற்றுக் கொள்ள விரும்புகின்றேன்" என்றார் அவர்.

1 2 3 4 5