• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 09:35:35    
Montpellier இல்லம்

cri

செங் துவிலுள்ள Montpellier இல்லம், செங் து நகரவாசிகளுக்கும் Montpellier நகரைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சேவை புரிகிறது. அது தரகர் நிறுவனத்தைப் போல் இருக்கிறது. லியூ ஜிங் ஹோங் அம்மையார் கூறியதாவது—

"பிரெஞ்சு பண்பாடு அல்லது Montpellier மீது ஆர்வம் கொண்ட செங் து நகரவாசிகள் சிலர், பண்பாடு, சுற்றுலா, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றைக் குறித்து ஆலோசனை பெற இங்கு வருகின்றனர். அவர்களுக்கு தொடர்பான சேவையை வழங்குவோம். அத்துடன், Montpellier நகரின் தொழில் நிறுவனங்களும் தனிநபர்களும் செங் துவில் வளர்ச்சி வாய்ப்பை நாடவும், சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் அல்லது தங்கியிருக்கவும் விரும்பினால், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்பான தகவல்களையும் முன்மொழிவையும் வழங்குவோம்" என்றார் அவர்.

Montpellier நகரைச் சேர்ந்த Alexander Beaudoux வளர்ச்சி வாய்ப்புக்காக செங் துவிலுள்ள Montpellier இல்லத்துக்கு வந்தார். அவர் கூறியதாவது—

"இந்த நகரம் நவீன மாயமாக்க நகரமாகும். இங்குள்ள மக்கள் வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்துள்ளனர். இந்த நகரம் எளிதான வாழ்க்கையை அனுபவிக்கக் கூடிய, காதல் உணர்வு நிறைந்த நகரமாக உள்ளது. மேலும் இந்த நகரம் தனக்கே உரித்தான கதையையும் பண்பாட்டையும் கொண்டுள்ளது" என்றார் அவர்.


1 2 3 4 5