• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 09:35:35    
Montpellier இல்லம்

cri

மேலும் அவர் சீன மொழியில் சரளமாக செய்தியாளரிடம் கூறியதாவது—

"பிரான்சில் இருந்த போது சீன உணவுகளை நான் நினைப்பதுண்டு. ஆனால் சீனாவில் இருந்த போது பிரெஞ்சு உணவுகளை நினைக்கவில்லை" என்றார் அவர்.

Montpellier இல்லம், செங் து Montpellier ஆகிய இரு நகரங்களுக்கிடையிலும், சீனா பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் பரஸ்பரப் புரிந்துணர்வுக்கான பாலமாக மாறியுள்ளது. Montpellier இல்லத்தின் தலைவர் லியூ ஜிங் ஹோங் அம்மையார், பண்பாட்டு தூதர் போல் பணிபுரிகிறார். செங் து நகரில் பிறந்த அவர், 2002ஆம் ஆண்டில் சீனா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடத்திய பரிமாற்ற பயிற்சித் திட்டத்தினால், Montpellier நகருக்கு சென்று கல்வி பயின்றார். சர்வதேச திட்டப்பணி நிர்வாகம் மற்றும் பேச்சுவார்த்தை துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், Montpellier இல்லம் நிறுவப்படும் முன், Montpellier மற்றும் செங் து நகராட்சியால் தலைவராக நியமிக்கப்பட்டார்.

"செங் து மற்றும் Montpellier நகரின் நிலை பற்றி நன்கு அறிந்து கொண்டதால், Montpellier இல்லத்தில் பணிபுரிவதற்கு ஏற்ற நபராக உள்ளேன் என செங் து மற்றும் Montpellier நகராட்சிகள் கருதுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4 5