• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-24 09:35:35    
Montpellier இல்லம்

cri

"இங்கே நான் பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன். எடுத்துக்காட்டாக, நடனம், kong fu, பீகிங் இசை நாடகம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இங்குள்ள வாழ்க்கை மகிழ்ச்சி தரக் கூடியது" என்றார் மற்றவர்.

Montpellier மற்றும் செங் து நகரங்களுக்கிடையிலான நட்புறவு 1981ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அவற்றுக்கிடையிலான பரிமாற்றத்தில், பண்பாடு, அறிவியல் மற்றும் கல்வி, பொருளாதாரம், மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்து தயாரிப்பு, சுற்றுலா முதலிய துறைகள் அடங்குகின்றன.

செங் து நகரத்தின் மையத்தில் Montpellier இல்லம் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குவது, பணிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது, சீன-பிரெஞ்சு மொழி தொடர்பான சிறப்பு வகுப்பை நடத்துவது ஆகியவற்றுக்கு அதன் பெரும்பாலான இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீன-பிராண்ஸ் நகரங்களில் முதல் இணை சகோதரி நகரங்கள் Montpellier மற்றும் செங் து தான் என்று Montpellier இல்லத்தின் தலைவர் லியூ ஜிங் ஹோங் அம்மையார் கூறினார்.  

"Montpellier இல்லம், செங் து நகரில் Montpellier பற்றி பிரச்சாரம் செய்யும் ஒரு சன்னல் போல் காணப்பட்ட போதிலும், Montpellier நகரைப் பொறுத்தவரை, இது செங் து நகரின் சன்னலாகும். Montpellier மக்கள் உள்ளிட்ட பிரெஞ்சு மக்கள் பலர் இந்தச் சன்னல் மூலம் செங் துவை பற்றி அதிகமாக அறிந்து கொள்கின்றனர்" என்றார் அவர்.

1 2 3 4 5