 இவ்வாண்டு, சீனாவின் குவாங் சி ச்சுவாங் இன மற்றும் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசங்களில் தன்னாட்சி அமைப்பு முறை செயல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். 10க்கு மேலான இனத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக, குவாங் சி மற்றும் நிங் சியா தன்னாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தேசிய இனங்கள், சீனாவின் 56 தேசிய இனங்களில் மிக முக்கிய உறுப்புகளாகும். இந்தத் தேசிய இனத்தவர்கள், இணக்கத்துடன் கூட்டாக வாழ்ந்து, வளர்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் ச்சுவாங் இனக் கிராமங்களில் அடைந்த மாற்றங்களை பற்றி, குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லோங் ஆன் மாவட்டத்தின் தூ ச்சியே கிராமத்தின் விவசாயி Wang Wannian எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது,
முன்பு, நீர், எண்ணெயைப் போன்று, விலை உயர்வாக இருந்தது. அப்போது, நாங்கள், சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சென்று, நீரை இறைக்க வேண்டியிருந்தது. பாதையில் 4 அல்லது 5 மணி நேரம் தேவைப்படும். அப்போதைய போக்குவரத்து வசதிகள் சரியானதாக இல்லை. இப்போது, ஒவ்வொரு வீட்டுக்கு நீர் தொட்டி உண்டு. மிகவும் வசதியாக இருக்கிறது. வீடுகளில் மின்சார வசதியும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணப்படுகின்றன. அதனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். முந்திய வாழ்க்கைத் தரம் தாழ்ந்த நிலையில் இருந்தது. இப்போது பெரிதும் மேம்பாடு அடைந்துள்ளோம் என்றார் அவர்.
1 2 3 4 5
|