
குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது, சீனாவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட சிறுபான்மைத் தேசிய இனத் தன்னாட்சிப் பிரதேசமாகும். ச்சுவாங், ஹான், யௌ, மியௌ உள்ளிட்ட 12 இனத்தவர்கள், இங்கு, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்கள், குறிப்பாக, தொலைத் தூரப் பிரதேசத்திலுள்ள வறுமையான சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, சீன அரசு, பெருமளவில் ஒதுக்கீடு செய்து, பல்வேறு முன்னுரிமைகளை வழங்கியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவச் சிகிச்சை முதலியவற்றில் இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க சீன அரசு உதவி செய்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சி, இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறது என்று குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Ma Biao தெரிவித்தார். அவர் கூறியதாவது,
2007ம் ஆண்டு, இப்பிரதேச நகரவாசிகளின் நபர்வாரி வருமானம், 12 ஆயிரத்து 200 யுவானை எட்டியது. அது, 1978ம் ஆண்டில் இருந்ததை விட, 41 மடங்கு அதிகம். வறுமையான பிரதேசங்களிலுள்ள உற்பத்தி மற்றும் வாழ்க்கைத் தரம், பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
1 2 3 4 5
|